சென்னை: நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். துரைமுருகன் என்னுடைய நீண்டகால நண்பர், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என ரஜினி பேட்டியளித்திருந்தார். எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நடிகர் ரஜினி குறித்து நகைச்சுவையாகவே பதிலளித்தேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.