சென்னை: அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகர் நல்லதம்பி என்பவர் மூலம் 33 பேரிடம் மொத்தம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார். 2021ல் பதியப்பட்ட வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அடுத்த கட்டமாக அவருக்கு சம்மன் அனுப்பி சிபிஐ விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு
0