சென்னை : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் மேலாளர் பணி வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிந்து 3 ஆண்டாகியும் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் மனு தாக்கல் செய்துள்ளார்.