ஜெய்ப்பூர்: தேர்தல் நேரத்தில் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங்கின் வீடுகள். எம்.எல்.ஏ.ஓம் பிரகாஷ் ஹட்லாவின் ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்திய அமவாக்கத்துறை, ராஜஸ்தான் முதல்வரின் மகனுக்கு சம்மன் அனுப்பியது. ராஜஸ்தானில் தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.