டெல்லி: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட உள்ள 33 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புராவிலும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.