ஜெய்ப்பூர்: பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் கடந்த ஜூன் 22ம் தேதி டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த பிரெஞ்சு பெண், டைகர் ஹில்ஸ் பகுதியில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அங்கு அறிமுகமான சித்தார்த் என்ற நபர் பிரெஞ்சு பெண்ணிடம் உதய்பூரில் உள்ள முக்கிய இடங்களை சுற்றி காண்பிப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை தன் அடுக்குமாடி குடியிருப்புக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற சித்தார்த், பெண் சுற்றுலா பயணியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ராஜஸ்தானில் பிரெஞ்சு பெண் பாலியல் பலாத்காரம்
0