எந்தவித பாரபட்சமும் பார்க்காமல், ஜோதிட கலையை நான் செய்து வருவதற்கு, சில பெரியவர்கள்தான் காரணம். எந்த கலையானாலும் அது மக்களுக்கு பயன்பட வேண்டும்; அதற்கு ஜோதிடத்தில் ஏதாவது வழி இருக்கிறதா என்று பெரியவர்களை கேட்டேன். அப்போது அவர்கள், ‘ஜோதிடத்தை கற்றுத் தருகிறோம், ஆனால், அதை வியாபாரமாக செய்ய கூடாது’ என்றனர். அதை தற்போது வரை பின்பற்றி வருகிறேன். ஜோதிடம் பார்க்க யாரிடமும் பணம் வாங்குவது இல்லை.கஷ்டப்படும் குடும்பங்கள் எல்லாம், நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. என்னை சந்திக்க வரும் மக்களிடம், விளக்கு ஏற்றி வழிபட சொல்வேன். அதை அவர்கள் செய்து வருவதால், பல்லாயிரக் கணக்கான குடும்பத்தினர் நன்றாக இருக்கின்றனர்.
வாழ்க்கையில், திடீரென பிரச்னை வந்தால், வீட்டின் பூஜை அறையில், நெய் அல்லது விளக்கு எண்ணெய் தீபம் ஏற்றுங்கள்; பிரச்னைகள் சில மணிநேரத்தில் குறைந்து விடும்.மேலே சொன்ன வார்த்தைகளுக்குச் சொந்தக்காரரான தினகரன் நாளிதழில் வரும் மாத ராசிபலன்கள் எழுதி வரும் பிரபல ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி திரு. ஏ. எம். ராஜகோபாலன் அவர்களின் 101வது பிறந்தநாள் சமீபத்தில் சென்னையில் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தின் போது நான்காவது முறையாக தனது மனைவிக்கு மங்கள சூத்திரம் கட்டினார். முதல் முறையாக, திருமணத்திலும் ,2வது – 61வது ஆண்டு (சஷ்டியப்த பூர்த்தி), 3வது முறை: 81 வது ஆண்டு (சதாபிஷேகம் அல்லது சஹஸ்ர சந்திர தரிசனம், அதாவது, அவர் 1000 மாதங்கள் கண்டார்) மற்றும் 4வது முறை: 101 வது பிறந்த நாள் நிறைவு மற்றும் 84 வருட திருமண ஆண்டுகள் வெற்றிகரமாக அதே தேதியில். இந்த வகையான வாய்ப்பு மிகவும் அரிதானது.
– குடந்தை நடேசன்