சென்னை: எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தமிழ் சமூகத்தின் அறிவியக்கத்திற்கு செழுமையூட்ட வாழ்வு முழுவதும் உழைத்திட்ட அறிவாளுமை ராஜ் கௌதமன். அறம், அதிகாரம் என்ற இரு சொல் கொண்டு பழந்தமிழ் இலக்கியம்முழுமையும் ஆய்ந்தறிந்தவர். ராஜ் கௌதமன் வரைந்து காட்டிய சித்திரம் தமிழ் சிந்தனை உலகிற்கு புத்தொளியூட்டியது என பதிவிட்டுள்ளார்.