Sunday, February 25, 2024
Home » மழைநீரில் மூழ்கி தலைமை காவலர் உயிரிழப்பு

மழைநீரில் மூழ்கி தலைமை காவலர் உயிரிழப்பு

by Suresh

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் லூதர் கார்டன் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ருக்மாங்கரன் (48). இவர், ஐசிஎப் காவல் நிலைய சட்டம் – ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவருக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் கீழ்ப்பாக்கம் மாநகராட்சி அலுவலகம் அருகே மழைநீரில் ருக்மாங்கரன் உடல் மிதப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் தலைமை செயலக காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ருக்மாங்கரன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளியே சென்றவர் மழைநீரில் தடுமாறி விழுந்து இறந்தாரா அல்லது உடல் உபாதைகள் ஏதாவது உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi