ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்குவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் மழைநீர் செல்வதற்கு வழியில்லாததால், இங்கு தேங்கும் மழைநீர் வற்றுவதற்கு 2 அல்லது 3 நாட்கள் ஆகிறது.
மேலும் பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது. இதனால் இங்கிருந்து பல ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீரை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.