திருப்பூர்: திருப்பூர் மூர்த்தி நகரை சேர்ந்த தம்பதி கிருஷ்ணகுமார் (33), சங்கீதா (27). இவர்களது 3 வயது மகன் சக்திவேல் நேற்று மதியம் வீட்டிற்கு அருகில் உள்ள மழைநீர் தேங்கிய குட்டையில் விளையாடச் சென்றான். திடீரென குட்டையில் தவறி விழுந்த சிறுவன் அதிகளவு தண்ணீர் குடித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினான்.
தாய் சங்கீதா வந்து சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.