கடலூர்: கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி 46 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் மிக பெரிய நீராதாரமாக விளங்கும் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
இதன் முழு கொள்ளளவு 47.50 கன அடியாகும். தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் 46 கன அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த மாதம் வறண்ட நிலையில் வீராணம் ஏரி காணப்பட்டது.
தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், மேட்டூர் அணையில் இருந்து தெண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணமாகவும் வீராணம் ஏரி தன முழு கொள்ளளவை எட்டி வருகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் ஏரி முழு கொள்ளளவை எட்டிவிடும் அதன் பிறகு விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.