கோவை : வால்பாறை, டாப்சிலிப் பகுதியில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கோவை ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, 2 நாட்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.மரம் வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. மாவட்ட சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியிலும் மண்டல வாரியாக உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன”இவ்வாறு தெரிவித்தார்.
வால்பாறை, டாப்சிலிப் பகுதியில் அதிக கனமழை : தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைப்பு!!
0
previous post