புதுச்சேரி: கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்தார் புதுச்சேரி ஆட்சியர். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்படி கன மழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் உதவி அழைப்பு எண்களான 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பொது மக்களின் நலன் கருதி பிரத்தியேகமாக மெசேஜ் வடிவிலான புகார்களை மட்டும் பதிந்திட 9488981070 என்கிற whatsapp எண்ணினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.