ராவல்பிண்டி: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்காக, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நேற்று நடைபெற இருந்த ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பலத்த மழை காரணமாக கைவிடப்பட்டது. ராவல்பிண்டியில் நேற்று காலை முதல் துாறலுடன் துவங்கிய வானிலை நேரம் செல்லச் செல்ல வலுவான மழையாக பொழியத் துவங்கியது. மாலை வரை மழை விடாததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தற்போது பி பிரிவில், தென் ஆப்ரிக்கா ரன் ரேட் அடிப்படையில் 2.14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 0.475 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளன. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அடுத்த போட்டி, பி பிரிவில் உள்ள இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் இடையே இன்று லாகூரில் நடைபெற உள்ளது. இந்த இரு அணிகளும் முதல் போட்டியில் தோற்றதால் அரை இறுதிக்கான போட்டியில் நீடிக்க வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளன.