Thursday, February 22, 2024
Home » ரயில் நிலையம் மறுகட்டமைப்பு பணி எழும்பூர் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம்

ரயில் நிலையம் மறுகட்டமைப்பு பணி எழும்பூர் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம்

by Karthik Yash

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுகட்டமைப்பு பணி நடைபெறுவதால் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை பல்வேறு நவீன வசதிகளுடன் உலகத்தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு ரூ.734.91 கோடியில் கடந்த ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது எழும்பூர் ரயில் வடக்கு நுழைவாயல் பகுதியில் உள்ள பேருந்து நிலையம், இருச்சக்கர வாகன நிறுத்தம் இடங்களில் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால் ரயில் நிலையம் அருகில் இருந்த பேருந்து நிலையம் தற்போது பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. எழும்பூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து வீனர்ஸ் சாலை வழியாக ரயில் நிலையம் அருகே சென்று பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் அதே வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை செல்லும்.

தற்போது எழும்பூர் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் 28, 28ஏ. 28பி ஆகியவை மற்றும் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூர் மெட்ரோ ரயில் அருகே தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று செல்லும் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மறுகட்டமைப்பு பணிகள் முடியும் வரை பேருந்துகள், இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் எழும்பூர் ரயில் நிலையம் அருகே அனுமதிக்கப்படாது.

You may also like

Leave a Comment

11 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi