சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து குடியிருப்பு, அலுவலகங்கள் மற்றும் பிற போக்குவரத்து சேவைகளை இணைக்கும் வகையில் 10 நிமிடங்களுக்கு ஒரு இணைப்பு வாகனம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ அதிகாரி கூறுகையில், ‘‘சென்ட்ரல், ஆலந்தூர் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு இணைப்பு வாகனம் இயக்கப்பட உள்ளது,’’ என்றார்.