நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இங்குள்ள மெக்கானிக் ஷெட்டில் ஒரு பகுதியில் தீ அணைக்கும் சிலிண்டர்கள் உள்ளன. நேற்று மதியம் ரயில்வே டிராபிக் ஊழியர் ஜோசப் கிறிஸ்டோபர் அப்பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது ஒரு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறி ஜோசப்கிறிஸ்டோபர் முகத்தை தாக்கியது. இதில் அவர் முகம் சிதைந்து, தலையிலும் பலத்த காயத்துடன் கீழே விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.