சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆந்திராவில் நடந்துள்ள விபத்தினால் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், ஒன்றிய அரசும், ரயில்வே துறையும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்தி ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.