டெல்லி: 2025-26ம் நிதியாண்டுக்குள் நாட்டின் ரயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாகும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் ரயில்வே விரைவான முன்னேற்றம் அடைந்து வருகிறது. நாட்டில் தற்போது 97 சதவீத ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து ஏற்கனவே 1500 மெகாவாட் மின்சாரம் ரயில்வேக்கு விநியோகிக்கப்படுகிறது” எனவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
2025-26ம் நிதியாண்டுக்குள் நாட்டின் ரயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாகும்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
0