சென்னை: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக வரும் 20, 21-ம் தேதிகளில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைத்தால் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.