சென்னை: ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்தை ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலம் விஜய நகரம் அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். இந்த விபத்து துரதிர்ஷ்டமானது.ரயில்வே நிர்வாகம் ரயில் போக்குவரத்தில் உரிய பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். ஒரு ரயிலில் ஆயிரக்கணக்கில் பயணிகள் பயணம் செய்யும் போது அவர்களின் பாதுகாப்பு முக்கியம். ரயில்வே எந்த நிமிடமும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இனிமேலும் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாதவாறு உரிய நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.