பணி: Group- C Level- I Posts: மொத்த காலியிடங்கள்- 32,438
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பணிகள் ( Assistant- (S &T), Assistant- Workshop (Mechanical), Assistant-Bridge (Engineering), Assistant- Carriage and Wagon (Mechanical), Assistant- Loco shed Diesel (Mechanical), Assistant – Loco shed (Electrical), Assistant- Operations (Electrical), Assistant- P.way- (Engineering), Assistant- TL and AC Workshop-(Electrical), Assistant- TL and AC- (Electrical), Assistant- Track Machine- (Engineering), Assistant- TRD (Electrical), Points man B (Traffic), Track Maintainer (Engineering).மண்டல வாரியாக காலியிடங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது: 01.01.2025 தேதியின்படி 18 முதல் 36க்குள். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். சம்பளம்: ரூ.18,000.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ படித்திருக்க வேண்டும் அல்லது காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடில் அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/பெண்கள்/சிறுபான்மையினருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி திறன் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவியல்/
கணிதம்/ரீசனிங்/நடப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
உடற்திறன் தகுதி தேர்வின் ேபாது ஆண்கள் 35 கிலோ எடையை தூக்கிக் கொண்டு 2 நிமிடங்களில் 100 மீட்டர் தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும். மேலும் 4 நிமிடங்கள் 15 வினாடிகளில் 1000 மீட்டர் தூரத்தை ஓடி முடிக்க வேண்டும்.பெண்கள் 20 கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு 2 நிமிடங்களில் 100 மீட்டர் தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும். 1000 மீட்டர் தூரத்தை 5 நிமிடங்கள் 40 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும்.
www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.02.2025.