தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 46 இடங்களுக்கு 10ம் வகுப்பு/ஐடிஐ/பிளஸ் 2 படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Sports Person (Sports Quota): மொத்த இடங்கள்: 46.
விளையாட்டு பிரிவுகள் விவரம்:
Archery-2. Athletics-6, Basket Ball-4, Volley Ball-6, Hand Ball-3, Hockey-4, Kho-Kho-2, Kabadi-3, Cricket-3, Power Lifting-4, Football-4, Badminton-3, Weight Lifting-2.
சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தக் கல்வித்தகுதியுடன் சம்பந்தப்பட்ட விளையாட்டுப் பிரிவில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி குறைந்தது, மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டுத் தகுதிகள் பற்றிய கூடுதல் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 01.01.2024 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். விளையாட்டுத் தகுதி மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கட்டணம்: ₹500 (எஸ்சி/எஸ்டி/பெண்கள்/சிறுபான்மையினருக்கு ₹250/-). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.secr.indianrailways.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.11.2023.