புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், முகல்சாராயில் தலைமை லோகோ பைலட் பதவி உயர்வுக்கான துறை சார்ந்த தேர்வு வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். முகல்சாராயில் 3 மற்றும் 4ம் தேதி இரவு சிபிஐ அதிகாரிகள் 3 இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
இதில் தற்போது லோகோ பைலட்டுக்களாக பணிபுரியும் 17 பேர் கையால் எழுதப்பட்ட வினாத்தாள் நகல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் பணம் கொடுத்து வினாத்தாள் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தேர்வு எழுத இருந்த 17 பேர் உட்பட 26 ரயில்வே அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.