மாதவரம்: கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் சாயிஷாம் (24). எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று அதிகாலை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் அருகே, பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர், சாயிஷாம் கையில் இருந்த விலை மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த நாட்களுக்கு முன், இதே பகுதியில் கிஷோர் மற்றும் பிரபு ஆகிய இருவரது செல்போன்களை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது. ஒரே நபர் இந்த செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுகிறாரா என சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.