மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மேற்கு ரயில்வே பணிமனைகளில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சி: Trade Apprentice. மொத்த பணியிடங்கள்: 3,624.
வயது: 15 முதல் 24க்குள். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற் பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: Electrician/ Fitter/Plumber/Painter/Welder (Gas & Electric)/Diesel Mechanic/Machinist/Motor Mechanic/Electronic Mechanic/PSAA/ Carpenter/Wireman/A/c Mechanic/Pipe Fitter/Draughtsman (Civil)/ Stenographerஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பயிற்சி தேர்வு செய்யப்படுவர்களில் வெல்டர் டிரேடுக்கு 15 மாதங்களும், இதர டிரேடுகளுக்கு ஒரு வருடமும் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் www.rrc.wr.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.07.2023.