இந்திய ரயில்வேயில் 7951 பணியிடங்கள் காலியாக உள்ளன. பி.இ.,/டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. Chemical Supervisor: 10 இடங்கள். தகுதி: கெமிக்கல் டெக்னாலஜி பாடத்தில் பி.டெக்., மற்றும் Petroleum Products, Paints and Corrosion, Prevention Polymers ஆகிய ஏதாவதொரு பாடத்தை படித்திருக்க வேண்டும்.
2. Metallurgical Supervisor: 7 இடங்கள். தகுதி: மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.44,900. வயது: 18 முதல் 36க்குள்.
3. Junior Engineer: தகுதி: சிவில்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ருமென்டேசன்/ டெலிகம்யூனிகேசன்/மெக்கானிக்கல் ஆகிய முக்கிய பொறியியல் பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 3 வருட டிப்ளமோ.
4. Depot Material Superintendent: தகுதி: ஏதாவது ஒரு பொறியியல் பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
5. Chemical & Metallurgical Assistant. தகுதி: இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் அடங்கிய ஏதாவதொரு பாடப்பிரிவில் 45% மதிப்பெண்களுடன் பிஎஸ்சி.,
மேற்குறிப்பிட்ட 3 பணிகளுக்கான மொத்த இடங்கள்: 7934.
சம்பளம்: ரூ.35,400. வயது: 18 முதல் 36க்குள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.ஆன்லைன் எழுத்துத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். இரண்டு கட்ட தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் ஆங்கிலம்/இந்தி/தமிழ் ஆகிய மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வு கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு www.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 29.08.2024.