டெல்லி: அடுத்த 4 ஆண்டுகளில் அனைத்து ரயில் எஞ்சின்களிலும் கவச் தானியங்கி பாதுகாப்பு கருவிகள் பொறுத்தப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. சுமார் 10,000 ரயில் எஞ்சின்களில் கவச் தானியங்கி கருவி பொருத்துவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி-சென்னை மற்றும் மும்பை – சென்னை – பிரிவுகளில் 3,300 கி.மீ தூரத்துக்கு கவச் திட்டத்துக்கு ஏலம் கோரப்பட்டுள்ளது. தென் மத்திய ரயில்வேயில் 1465 கி.மீ. தூரத்துக்கு 144 ரயில் எஞ்சின்களில் கவச் பொருத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது