சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் தடத்தில் 23 மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்து சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கடற்கரை – எழும்பூர் ரயில் நிலையம் இடையே இன்று, 5, 7-ல் இரவு 10.30 அதிகாலை 4.30 வரை ரயில் பாதை மேம்பாட்டு பணி நடைபெறுகிறது. கடற்கரை – தாம்பரம் இரவு 9.10, 9.30 மணி ரயில்கள் வரும் 5, 7-ல் ரத்து செய்யப்படுகிறது. கடற்கரை – தாம்பரம் அதிகாலை 4.15 மணி ரயில் வரும் 4, 6-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.