Sunday, July 14, 2024
Home » ரயில் பயணிகளுக்கு சந்தோஷமான செய்தி ஏசி வசதி இல்லாத 10,000 பெட்டிகள் தயாரிப்பு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

ரயில் பயணிகளுக்கு சந்தோஷமான செய்தி ஏசி வசதி இல்லாத 10,000 பெட்டிகள் தயாரிப்பு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

by Karthik Yash

புதுடெல்லி: ஏசி வசதி அல்லாத 10,000 பெட்டிகளை தயாரிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ரயில்களில் பயணிக்கும் சாமானிய மக்களின் பிரச்னைகளை கருத்தில் கொண்டு 2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில் மொத்தம் 10,000 ஏசி அல்லாத கூடுதல் பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில்(2024-25) 4,485 ஏசி அல்லாத பெட்டிகளையும், 2025-26 நிதியாண்டில் 5,444 ஏசி அல்லாத பெட்டிகளையும் தயாரிக்க முடிவு செய்து அதற்கான உற்பத்தியை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

அதன்படி 2024-25 நிதியாண்டில் 2,605 பொதுப்பெட்டிகள் தயாரிக்கப்படும். பயணிகளின் வசதியை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட சிறப்பு அம்ரித் பாரத் சிறப்பு கோச்களும் இதில் அடங்கும். மேலும் 1,470 ஏசி அல்லாத ஸ்லீப்பர் கோச்சுகள், 323 எஸ்எல்ஆர்(சிட்டிங்-கம்-லக்கேஜ்-ரேக்) பெட்டிகள், அம்ரித் பாரத் கோச்சுகள், 32 அதிக திறன் கொண்ட பார்சல் வேன்கள் தயாரிக்கப்படும். இதேபோல் 2025-26 நிதியாண்டில் 2,710 பொதுப்பெட்டிகள், 1,910 ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

5 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi