சென்னை: சைதாப்பேட்டை சிஐடி நகரில் மீன் வளத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அமலா (38), மாற்றுத்திறனாளி. இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில், செல்போன் பார்த்தபடி, டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், திடீரென அமலாவின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். இதை சற்றும் எதிர்பார்க்காத அமலா, உதவி கேட்டு கூச்சலிட்டார். அதன்பேரில், அங்கு ேராந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், சைதாப்பேட்டையை சேர்ந்த கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடி சாதிக் பாஷா (22) என தெரியவந்தது. அவனை கைது செய்தனர்.
டீ குடித்து கொண்டிருந்த போது மீன்வளத்துறை ஆய்வாளரிடம் செல்போன் பறித்த ரவுடி கைது
previous post