புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் எம்பி ராகுல்காந்தி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 5 நாள் சுற்றுப்பயணமாக அடுத்த வாரம் ஐரோப்பியா புறப்பட்டு செல்கிறார். ராகுல் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு செல்கிறார். வரும் 7ம் தேதி பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களை ராகுல் காந்தி சந்திக்கிறார். 8ம் தேதி பாரிஸ் பல்கலைக்கழக மாணவர்களிடம் உரையாற்றுகிறார். 9ம் தேதி பிரான்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 10ம் தேதி இந்திய வம்சாவளி மக்களிடையே உரையாற்ற உள்ளார்.