சுல்தான்பூர்: அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராக கடந்த மாதம் உபி மாநிலம் சுல்தான்பூர் சென்ற ராகுல்காந்தி, லக்னோ திரும்பும் வழியில் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம் சேத் என்பவரை சந்தித்தார். ராம்சேத் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ நான் வசிக்கும் பகுதியில் கழிவறை, மின்வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஒரு மாதத்திற்கு முன்னர் ரேஷன் கார்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ’’ என்றார். இந்தநிலையில்,சுல்தான்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங் ராணா ராம்சேத்தை அழைத்து கொண்டு மாவட்ட கலெக்டர் கிருத்திகா ஜோத்சனாவை நேற்று சந்தித்து மனு கொடுத்தார். பிரச்னைகளுக்கு ஒருவாரத்தில் தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.