ஆளுநர்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு என்று தனி மொழி, கலாச்சாரத்தைக் கொண்டுள்ளன. கூட்டாட்சி மீதான ஒன்றிய அரசின் தாக்குதலை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.