புதுடெல்லி; மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு செல்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக த்துறை தலைவர் பவன்கேரா கூறுகையில், வருகின்ற 21 மற்றும் 22ம் தேதி அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்திற்கு ராகுல் காந்தி செல்வார். அங்கு அவர் உரை நிகழ்த்தி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுவார். முன்னதாக அவர் அமெரிக்க வாழ் இந்தியர்களையும், இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களையும் சந்திப்பார்” என்றார்.
ராகுல் அமெரிக்கா பயணம்
0
previous post