திருமலை: தெலங்கானா மாநிலம், காளேஸ்வரம் திட்டத்தில் கட்டப்பட்ட மேடிகட்டா அணையில் ஏற்பட்டுள்ள விரிசலை நேற்று ராகுல்காந்தி ஆய்வு செய்தார். பின்னர் நடைபெற்ற மகளிர் அதிகார மாநாட்டில் அவர் பேசியதாவது: ரூ.1 லட்சம் கோடி செலவில் கட்டப்பட்ட அணை 2 ஆண்டுகளில் சேதமடைந்துள்ளது.
பிஆர்எஸ் ஆட்சியில் இந்த ஒன்பதரை ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காளேஸ்வரம் திட்டம் பிஆர்எஸ், கேசிஆர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ஏடிஎம் போல மாறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.