தேவையானவை:
ராகி சேமியா – 200 கிராம்,
உருளைக்கிழங்கு – 200 கிராம்,
கடலைமாவு – 25 கிராம்,
தேங்காய் துருவல் அரை கப்,
பச்சை மிளகாய் – 6,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை,
புதினா – சிறிதளவு,
இஞ்சி – சிறிய துண்டு,
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 200 கிராம்.
செய்முறை:
கொதிக்கும் தண்ணீரில் ஒரு பங்கு சேமியாவுக்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு போட்டு ேவகவைத்து அடுப்பிலிருந்து இறக்கி, தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த தண்ணீரை வேகவைத்த சேமியாவில் ஊற்றி, மறுபடியும் தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பிசைந்து வைக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி தழை, புதினா ஆகியவற்றை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்துப் பிசைந்து, பின்பு மஞ்சள் தூள், தேங்காய் துருவல், கடலை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவு கலவையை எடுத்து வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். உடலுக்கு சத்தானது, ருசியானது.