முள்ளங்கி காம்பு – 1 கப்,
பச்சை மிளகாய் – 3,
தேங்காய் துருவல் – 8 ஸ்பூன்,
புளி – சிறிதளவு,
இஞ்சி – ஒரு சின்ன துண்டு,
பூண்டு – 2 பல்,
உப்பு – தேவைக்கு,
கடுகு,
உளுந்து,
கறிவேப்பிலை,
எண்ணெய் – தாளிக்க.
செய்முறை :
முள்ளங்கி காம்பை நன்கு கழுவி சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து, முள்ளங்கி காம்பு, மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். ஆறியதும், தேங்காய் துருவல், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து கலக்கவும். நல்ல மணம், சுவை நிறைந்த முள்ளங்கி காம்பு சட்னி தயார்.