கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரியணிப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜேஷ் கண்ணா (17), தனியார் கோழி பண்ணை ஊழியர் முருகானந்தம் (25) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு முயல் வேட்டைக்கு சென்றுள்ளனர். நேற்று காலை வரை வீடு திரும்பாததால் காட்டு பகுதிக்குள், உறவினர்கள் சென்று தேடி பார்த்தனர்.
அப்போழுது கோமபுரம் தனியார் தைலமர தோட்டத்தில் 2 பேரும் இறந்து கிடந்தனர். தகவலறிந்து கந்தர்வகோட்டை போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், விவசாயிகள் காட்டு பன்றிகளுக்கு வைக்கும் மின் வேலியில் சிக்கி ராஜேஷ் கண்ணா, முருகானந்தம் ஆகியோர் இறந்தது தெரிய வந்துள்ளது.