புதுடெல்லி: ராஜஸ்தானில் ஆசிரியர் பணிக்கான தேர்வு தாள் கசிந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநில கல்வி துறையில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக மாநில அரசு தேர்வாணையம் சார்பில் தேர்வு நடந்தன. அதில், தேர்வு நடப்பதற்கான வினாத்தாள்கள் கசிந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஜெய்ப்பூர் ,பார்மர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.