சென்னை: குவாரி உரிமையாளர்கள் பூமி தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர் என கோவையில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக விதித்த அபராதத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை கருத்து தெரிவித்துள்ளது. மேலும் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டமே நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காக்கத்தான். அதிகாரிகள் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு மறுபுறம் குவாரி செயல்பட அனுமதித்துள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய சம்பந்தப்பட்ட துறை ஆணையரின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது” எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குவாரி உரிமையாளர்கள் பூமி தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர்: உயர்நீதிமன்றம் வேதனை
0