மதுரை: குவாரி விபத்தில் 6 பேர் பலியான விவகாரத்தில் குவாரி உரிமையாளருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 6 பேர் மரணத்துக்கு காரணமான குவாரி உரிமையாளர், மேலாளர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். குவாரி உரிமையாளர் மேகவர்மன், மேலாளர் ராஜசேகரனுக்கு முன் ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை: சிங்கம்புணரி அருகே மே 20-ல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்தனர். விபத்தைத் தொடர்ந்து குவாரி உரிமம் ரத்து செய்யப்பட்டு, ரூ.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. குவாரி உரிமையாளர், மேலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிந்து, சிலர் கைது செய்யப்பட்டனர்
குவாரி விபத்து – உரிமையாளருக்கு முன்ஜாமீன்
0