தோகா: கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோகாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் போலந்து வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபாகினாைவ 6-2, 7-5 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் உக்ரேனியாவின் மார்டா கோஸ்ட்யுக்கை அமெரிக்காவின் அமண்டா 6-4, 5-7, 4-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதேபோல் துனிசியாவின் ஒன்ஸ் ஜபூர் மற்றும் லாட்வியாவின் ஓஸ்டாபென்கோ மோதிய காலிறுதியில் 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் ஒஸ்டாபென்கோவும், ரஷ்யாவின் அலெக்ஸ்டாண்ட்ரோவா மற்றும் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதிய காலிறுதியில் 4-6, 6-1, 6-1 என்ற கணக்கில் அலெக்ஸ்டாண்ட்ரோவாவும் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தனர். இன்று நடக்கும் முதலாவது அரையிறுதியில் ஓஸ்டாபென்கோ ஸ்வியாடெக்குடனும், அலெக்ஸ்டாண்ட்ரோவா அமண்டாவுடனும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.