ஈரான்: கத்தார் நாட்டின் தோகாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்க விமான படை தளமான அல்-உதெய்த் தளத்தை குறி வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரான் ஏவிய 10 ஏவுகணைகளில் 7 முறியடிக்கப்பட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. தங்கள் மீது அமெரிக்கா நடத்திய அதே எண்ணிக்கையில் ஏவுகணைகளை வீசியதாக ஈரான் அறிவித்தது. தங்களின் தாக்குதலில் நட்பு நாடான கத்தாருக்கோ, அதன் மக்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. கத்தார் மட்டுமின்றி சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் அளித்துள்ளது.
கத்தார் நாட்டின் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
0
previous post