புழல்: ராஜிவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு புழல் அடுத்த 31வது வார்டு கதிர்வேடு காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் வார்டு கவுன்சிலரும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளருமான கதிர்வேடு சங்கீதா பாபு ராஜிவ்காந்தி படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் புழல் சர்க்கிள் தலைவர் சந்திரசேகர், அகிலன், கங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் புழல் காங்கிரஸ் சார்பில் மத்திய சிறைச்சாலை அருகில் உள்ள ராஜிவ்காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர் வழக்கறிஞர் தேவேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் அச்சுதன், வாசுதேவன், தண்டபாணி, நாகராஜ் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் புழல் ஜெயசீலன், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் தலைவர் பாபு, ரவிச்சந்திரன் ரங்கநாதன், முரளிதரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாதவரம் தெற்கு பகுதி காங்கிரஸ் சார்பில் லட்சுமிபுரம்-வில்லிவாக்கம் சாலை, கடப்பா சாலை சந்திப்பில் ராஜிவ்காந்தி படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மாதவரம் தெற்கு பகுதி தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கிரிதரன், கண்ணன், கமலக்கரராவ், வட்ட தலைவர்கள் அனில்குமார், காலசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.