புழல்: புழல் மத்திய சிறையில் சமையலர், லாரி ஓட்டுனர், நெசவு போதகர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:
புழல் மத்திய சிறை-1ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொன்னேரி கிளைச்சிறையில் ஒரு சமையலர் இடம் நிரப்பப்படுகிறது. இப்பணிக்கு 1.7.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 34 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும். ஊதியம் ₹15,900-58,500. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். குறைந்தது 2 வருடம் சமையலர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
புழல் மத்திய சிறை-1ல் ஒரு லாரி ஓட்டுநர் பணியிடம் நிரப்படுகிறது. இப்பணிக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 வருடங்களும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. ஊதியம் ₹19,500-71,900. குறைந்தது எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருடம் ஓட்டுநர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒரு நெசவு போதகர் பணியிடம் நிரப்படுகிறது. இப்பணிக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம் ₹19,500-71,900.
தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையினரால் கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிகளுக்கான விண்ணப்பங்கள் 13.9.2024ம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, புழல் சென்னை-66. என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். 13.9.2024 மாலை 5 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-26590615 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.