Saturday, September 21, 2024
Home » புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்திற்கு மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்திற்கு மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

by Lavanya

சென்னை: புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்திற்கு மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 2024-2025 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் திருக்கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனர். பல்வேறு திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும் விருப்பமாகக் கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கும் இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர்.

இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்“ என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் திருக்கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி (உணவு உட்பட) அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.  புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது 21.09.2024, 28.09.2024, 05.10.2024, 12.10.2024 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன.

சென்னை மண்டலத்தில் திருவல்லிக்கேணி. பார்த்தசாரதி திருக்கோயில், பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி திருக்கோயில், திருவிடந்தை, நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை, நீர்வண்ண பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், காஞ்சிபுரம் மண்டலத்தில் காஞ்சிபுரம், தேவராஜ பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், வைகுண்ட பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், பாண்டவதூத பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர், ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம், ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், விழுப்புரம், வைகுண்ட பெருமாள் திருக்கோயில், கோலியனூர், வரதராஜ பெருமாள் திருக்கோயில், பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், பரிக்கல், லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மண்டலங்களில் கும்பகோணம், சக்கரபாணி பெருமாள் திருக்கோயில், கும்பகோணம், சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில், உப்பிலியப்பன்கோயில், அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், நாச்சியார்கோயில், ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில், திருச்சேறை, அருள்மிகு சாரநாத பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், திருச்சி மண்டலத்தில் ஸ்ரீரங்கம்,

அரங்கநாத சுவாமி திருக்கோயில், உத்தமர்கோயில், புருஷோத்தம பெருமாள் திருக்கோயில், அன்பில், சுந்தராஜ பெருமாள் திருக்கோயில், திருவெள்ளறை. புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில், கோவிலடி, அருள்மிகு அப்பகுடத்தான் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,மதுரை மண்டலத்தில் அழகர்கோயில், கள்ளழகர் திருக்கோயில், ஒத்தக்கடை, யோக நரசிம்ம பெருமாள் திருக்கோயில், திருமோகூர், காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோயில், மதுரை, கூடலழகர் பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களில் பெருங்குளம், அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோயில், இரட்டை திருப்பதி, அரவிந்தலோசனர் திருக்கோயில், கள்ளபிரான், தேவர்பிரான் திருக்கோயில், இரட்டை திருப்பதி திருக்கோயில், நத்தம், விஜயாசன பெருமாள் திருக்கோயில், திருப்புளியங்குடி, அருள்மிகு காய்சினி வேய்ந்த பெருமாள் திருக்கோயில், தென்திருப்பேரை, அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, ஆதிநாத ஆழ்வார் திருக்கோயில், திருக்கோளூர், வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில், கள்ளபிரான், அருள்மிகு வைகுண்ட பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்தகுடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in<http://www.hrce.tn.gov.in>-லிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து 19.09.2024-க்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்திட வேண்டும். மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1757, சென்னை மண்டலத்திற்கு 044-29520937, 9941720754, காஞ்சிபுரம் மண்டலத்திற்கு 044-29592380,

விழுப்புரம் மண்டலத்திற்கு 04146-225262, மயிலாடுதுறை மண்டலத்திற்கு 04364-299258, 8807756474, தஞ்சாவூர் மண்டலத்திற்கு 04362-238114, திருச்சி மண்டலத்திற்கு 0431-2232334, மதுரை மண்டலத்திற்கு 0452-2346445, தூத்துக்குடி மண்டலத்திற்கு 0461-2341144, திருநெல்வேலி மண்டலத்திற்கு 0462-2572783 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

19 + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi