டெல்லி: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலின்றி நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. தனது ஒப்புதலின்றி நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவை கூட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற ஆளுநர் தரப்பு வாதம் நிராகரிக்கப்பட்டது. தனது சம்மதம் இன்றி கூட்டப்பட்ட சட்டப்பேரவை கூட்டம் செல்லாது என பஞ்சாப் ஆளுநர் கூறியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.