* ஐபிஎல் 18வது தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
* இரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய தலா 5 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை வசப்படுத்தி இருக்கின்றன.
* இரு அணிகளும் 18வது முறையாக ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து களம் கண்டுள்ளன. ஆனால் இதுவரை கோப்பையை முத்தமிடாத அணிகளாகவே இரு அணிகளும் உள்ளன.
* இந்த 2 அணிகளும் இதுவரை 36 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் இரு அணிகளும் தலா 18 ஆட்டங்களில் வெற்றி, தோல்விகளை கண்டுள்ளன.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக பெங்களூரு 241, பஞ்சாப் 232 ரன் விளாசி இருக்கின்றன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 88, பெங்களூரு 84 ரன்னில் சுருண்டுள்ளன.
* இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் பெங்களூரு 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த பஞ்சாப்-பெங்களூரு அணிகள், மே 29ம் தேதி, முதல் குவாலிபையரில் களம் கண்டன. அதில் பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது.
பெங்களூரு லீக் சுற்று
1 நடப்பு சாம்பியன் கொல்கத்தாவிடம் 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
2 5 முறை சாம்பியன் சென்னையிடம் 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
3 முன்னாள் சாம்பியன் குஜராத்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
4 5 முறை சாம்பியன் மும்பையிடம் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
5 டெல்லியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
6 முதல் சாம்பியன் ராஜஸ்தானிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
7 மழை காரணமாக 14 ஓவர்களாக நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் 5விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
8 அடுத்த 3 நாட்களில் பஞ்சாப்பிடம் 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
9 ராஜஸ்தானிடம் மீண்டும் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
10 டெல்லியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி.
11 சென்னையிடம் 2 ரன் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி.
12 கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக கை விடப்பட்டது.
13 ஐதராபாத்திடம் 42 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி.
14 லக்னோவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
பஞ்சாப் லீக் சுற்று
1 முன்னாள் சாம்பியன் குஜராத்திடம் 11ரன் வித்தியாசத்தில் வெற்றி.
2 லக்னோவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
3 முதல் சாம்பியன் ராஜஸ்தானிடம் 50ரன் வித்தியாசத்தில் தோல்வி
4 5முறை சாம்பியன் சென்னையிடம் 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
5 முன்னாள் சாம்பியன் ஐதராபாத்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
6 கொல்கத்தாவிடம் 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
7 மழை காரணமாக நடந்த 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் பெங்களூரிடம் 5விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
8 அடுத்த 3 நாட்களில் பெங்களூருவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
9 கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
10 சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
11 லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன் வித்தியாத்தில் மீண்டும் வெற்றி.
12 ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி.
13 டெல்லிக்கு எதிரான ஆட்டம் போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்டது. மீண்டும் நடந்த ஆட்டத்தில் டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
14 5முறை சாம்பியன் மும்பையிடம் 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி